ஆபாச வீடியோ விவகாரம்: கர்நாடக அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி ராஜினாமா; ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளதாக மாநில முதலவர் தகவல்

பெங்களூரு: கர்நாடக நீர்பாசனத்துறை அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலியின் ராஜினாமாவை அம்மாநில முதல்வர் பி.எஸ். யெடியூரப்பா ஏற்றுக் கொண்டு ஆளுநருக்கு ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளார். ஆபாச வலைத்தளத்தில் அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலியின் ஆபாச வீடியோ வெளியான நிலையில் ராஜினாமா செய்துள்ளார். கர்நாடகத்தில் பாஜக -வை சேர்ந்த அமைச்சர், பெண் ஒருவருடன் தனிமையில் இருக்கும் ஆபாச வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில், அவர் ஒரு அடையாளம் தெரியாத பெண்ணோடு தனிமையில் இருப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இந்நிலையில், பெண் ஒருவரிடம் இவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக சமூக ஆர்வலர் ஒருவர் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் அரசு வேலை கோரி அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலியிடம் சென்றுள்ளார். அப்போது, அந்தப் பெண்ணை அவர் துன்புறுத்தியதாகவும், பாலியல் ரீதியாகவும் அத்துமீறியதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது. இந்தச் சம்பவங்களைப் பாதிக்கப்பட்ட பெண் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோக்கள் தற்போது இணையதளத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அமைச்சரிடம் இருந்து தொடர்ந்து அச்சுறுத்தல்கள் வருவதாக புகார் அளித்திருந்தார். இன்று கர்நாடக போலீஸ் கமிஷனர் கமல் பந்த்தை நேரில் சந்தித்த தினேஷ் கல்லஹள்ளி, இது குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று புகாரளித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான ஆடியோ மற்றும் வீடியோக்களை கமிஷனரிடம் அளித்துள்ளதாகவும் இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று மூக ஆர்வலர் தினேஷ் கல்லஹள்ளி கூறினார்.

Related Stories: