ஆன்மிக குரு பங்காரு அடிகளார் 81வது பிறந்தநாள்: ரூ.1.5 கோடியில் 1200 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

மதுராந்தகம்: மேல்மருவத்தூர் ஆதிபாரசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் 81வது பிறந்தநாள் விழா, 4 நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது. முதல் நாளான பிப்.28ம் தேதி  காலை சித்தர் பீடம் வந்த அடிகளாருக்கு சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட செவ்வாடை பக்தர்கள் பாத பூஜை செய்து வரவேற்றனர். 2ம் நாளான மார்ச் 1ம் தேதி காலை 9.30 மணியளவில் பங்காரு அடிகளாரை வெள்ளி ரதத்தில் சித்தர் பீடம் அழைத்து வந்த செவ்வாடை பக்தர்கள், குடும்பத்துடன் பாத பூஜை  செய்தனர். 3ம் நாளான நேற்று காலை விழுப்புரம், கடலூர் மாவட்ட ஆன்மிக இயக்க பக்தர்களால் தங்க ரதத்தில் பங்காரு அடிகளாரை சித்தர் பீடம் அழைத்து வந்து, பாத பூஜை செய்தனர். மாலை 5 மணிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

ஆன்மிக இயக்க துணை தலைவர் தேவி ரமேஷ் வரவேற்றார்.  ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் விழா பேரூரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராக மாநில மனித உரிமை ஆணைய தலைவர் பாஸ்கரன் கலந்து கொண்டு விழா மலரை வெளியிட்டார். தொடர்ந்து, ஆன்மிக குரு பங்காரு அடிகளார், 1,200 பேருக்கு 1000 மரக்கன்றுகள், ஆம்புலன்ஸ் வாகனம், அரசு பள்ளிகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பு கருவி, மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள்கள், லேப்டாக் உள்பட ரூ.1.5 கோடியில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், ஒரு ஜோடிக்கு இலவச திருமணம் செய்து வைத்து, சீர்வரிசை பொருட்கள் வழங்கினார்.இதில், ஆதிபராசக்தி மருத்துவ பண்பாட்டு நிலைய தாளாளர் உமாதேவி, ஆதிபராசக்தி மருத்துவமனை நிர்வாக இயக்குனர் ரமேஷ்,  வழக்கறிஞர் அகத்தியன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை சேலம், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்ற செவ்வாடை பக்தர்கள் செய்தனர்.

Related Stories: