மீண்டும் பரவும் கொரோனா...! முகக்கவசம் கட்டாயம்..! மார்ச் 31ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் தற்போது அமலில் இருந்த ஊரடங்கு இன்றுடன் நிறைவடையவுள்ள நிலையில், மார்ச் 31ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது உருமாறிய கொரோனா வைரஸின் தாக்கம், நோய் பரவல் நிலை போன்றவற்றை கருத்தில் கொண்டு தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் பிப்.28 வரை ஊரடங்கு அமலில் இருந்தது. இந்த உத்தரவானது இன்றுடன் நிறைவடைகிறது.

இந்நிலையில் வரும் மார்ச் 31ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறையுடன் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு கூட்டங்கள் நடத்தவும் விளையாட்டு, கலாச்சார, கல்வி மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களில் 200 பேர் வரை பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும் முகக்கவசம் அணிய வேண்டும், பொது இடங்களில் தனிநபர் இடைவெளி கடைபிடிக்க வேண்டும், கொரோனா தொற்று மேலும் பரவாமல் இருக்க மக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது. மருத்துவ வல்லுநர் குழு மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடனான பின்னரே முதல்வர் ஊரடங்கை நீட்டித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>