தமிழக சட்டமன்ற தேர்தல்: தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் அமைச்சர்கள் சந்திப்பு; தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை என தகவல்

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். தேமுதிகடன் தொகுதி பங்கீடு தொடர்பாக அமைச்சர்கள் பேச்சுவார்ததையில் ஈடுபட்டு வருகின்றனர். சட்டப்பேரவையில் தேர்தல் கூட்டணியை இறுதிசெய்ய அதிமுக தீவிரம் காட்டும் நிலையில் விஜயகாந்த உடன் சந்திப்பு நடைபெற்று வருகிறது. அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமியும் விஜயகாந்த் உடனான சந்திப்பில் உடனிருந்தார். அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கிய நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடன் சந்திப்பு நடைபெற்று வருகிறது. பாமகவுடன் தொகுதி பங்கீடு முடிவடைந்ததை அடுத்து, விஜயகாந்தை சந்தித்து கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

விரைவில் தொகுதி பங்கீடு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேமுதிக சார்பில் பொருளாளர் பிரேமலதா விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார். அதேபோல் அவரது மகன் விஜயபிரபாகரன் அம்பத்தூர் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்யதள்ளார். மேலும் விஜயகாந்த் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>