மின்வாரியத்தில் கேங்மேன் பணி வழங்கக்கோரி முதல்வர் எடப்பாடி வீட்டை முற்றுகையிட்டு போராட்டம்: தேர்வு எழுதிய 100க்கும் மேற்பட்டோர் கைது

சென்னை: மின்வாரியத்தில் கேங்மேன் பணி வழங்க வேண்டும் எனக்கூறி, அத்தேர்வை எழுதியவர்கள் சிலர் சென்னையில் உள்ள முதல்வர் இல்லத்தை நேற்று முற்றுகையிட்டனர். இதையடுத்து நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். தமிழக மின்வாரியத்தில் களப்பணிக்காக உருவாக்கப்பட்ட கேங்மேன் பணிகளுக்கு 2019ம் ஆண்டு தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டது. தமிழக அரசின் கீழ் வாரியமாகவே வேலைவாய்ப்பை உருவாக்கி தரப்படும். மேலும் கேங்மேன் பணிக்கு 5 ஆயிரம் பேரை எடுப்பதாக தெரிவித்திருந்தோம். காலிப்பணியிடங்கள் அதிகமாயிருந்த காரணத்தினால் முதல்வர் 10 ஆயிரம் பேரை எடுக்க அறிவுறுத்தியதின் அடிப்படையில் ஆணையிட்டோம். இதில் தடை பெற தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் உயர் நீதிமன்றம் சென்றுள்ளனர். அவர்களிடம் பணி செய்த நபர்களுக்கு பணி வழங்க வேண்டும் என்பதற்காக நீதிமன்றம் சென்றுள்ளார்கள். அவர்கள் வழக்கை வாபஸ் வாங்கினால் அடுத்த கணமே இந்த வாரத்திலேயே 10 ஆயிரம் பேருக்கு பணி வழங்கப்படும் என்று கூறினார்.

இதையடுத்து புதிதாக கேங்மேன் பணியாளர்கள் தேர்வுக்கான நடவடிக்கைகள் 70 சதவீத பணிகள் முடிந்து விட்டது. அதேநேரத்தில், ஒப்பந்த பணியாளர்களும் தொடர்ந்து பணியாற்ற அனுமதி தரப்படும் என்று தமிழக அரசு சார்பில் நீதிமன்றத்தில் விளக்கம் தரப்பட்டது. இதையடுத்து தேர்வு செய்யப்பட்ட 9,613 பேருக்கு தமிழ்நாடு மின்வாரியம் மின்னஞ்சல் மூலம் பணி நியமன ஆணை அனுப்பப்பட்டது. மேலும் தேர்வு செய்யப்பட்டவர்கள் செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது.  இந்நிலையில் கேங்மேன் தேர்வை எழுதியவர்களில் சிலர் தங்களுக்கும் கேங்மேன் பணி நியமனம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டை நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் அளித்த பேட்டி:

கடந்த 2019ம் ஆண்டு உடல்தகுதி, நேர்முகத் தேர்வு உட்பட அனைத்து தேர்விலும் தேர்வான 15 ஆயிரம் பேரில் பட்டப்படிப்பு, பட்டயபடிப்பு முடித்த 10 ஆயிரம் பேருக்கு மட்டும் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. கல்வித்தகுதி 5ம் வகுப்பு என அறிவித்த நிலையில் ஒப்பந்த ஊழியர்களாக பல ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் உள்ள எங்களுக்கும் பணி நியமனம் செய்து உத்தரவிட வேண்டும். சூழலில் சிக்கித் தவிக்கிறோம். இவ்வாறு கூறினார்.

Related Stories: