கோலார் ஏபிஎம்சி மையம் இடமாற்றம் செய்ய 40 ஏக்கர் நிலம் ஒதுக்க வேண்டும்: விவசாய சங்கம் கோரிக்கை

கோலார்: கோலார் நகரில் நவீன வசதிகளுடன் கூடிய ஏபிஎம்சி மையம் அமைக்க 40 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யும்படி மாவட்ட கலெக்டரிடம் விவசாய சங்கம் மற்றும் பசுமை படை நிர்வாகிகள் மனு கொடுத்தனர்.  கோலார் மாவட்ட விவசாய சங்கம் மற்றும் பசுமைப்படை நிர்வாகிகள் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்.செல்வமணியை நேரில் சந்தித்து கொடுத்த மனுவில், கோலார் நகரில் தற்போது இயங்கி வரும் ஏபிஎம்சி மையம் போதிய அடிப்படை வசதிகள் குறைபாடுகள் நிறைந்துள்ளதுடன் இட நெருக்கடியாக உள்ளது. ஏபிஎம்சிக்கு தினமும் விவசாயிகள் கொண்டு வரும் விளை பொருட்களை உள்ளே கொண்டு வந்து சேர்க்க முடியாமல் அவதிப்படுகிறார்கள். தற்போதுள்ள ஏபிஎம்சி மையத்தை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தி வருகிறோம். மாவட்ட நிர்வாகமோ அல்லது ஏபிஎம்சி நிர்வாகமோ இதில் கவனம் செலுத்தாமல் காலம் கடத்துகிறது.

சுங்க வரி மூலம் கோடிக்கணக்கில் வருவாய் கிடைத்து வந்தாலும் அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதில் மட்டும் அலட்சியம் செய்யப்படுகிறது. இந்த விஷயத்தில் தாங்கள் கவனம் செலுத்திய புதிய ஏபிஎம்சி மையம் அமைக்க 40 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்’’ என்று கூறியிருந்தனர். மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர், ஆவண செய்வதாக உறுதியளித்தார்.

Related Stories: