அண்ணா சிலை முன் தரையில் உருளும் போராட்டம்

சென்னை: பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். இறந்த சாலை பணியாளர்களுக்கு வாரிசு வேலை வழங்க வேண்டும். சாலை பணியாளர்களின் தர ஊதியத்தை ரூ.1900 ஆக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பணியாளர் சங்கம் சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க தலைவர் சண்முகராஜா, தலைமை வகித்தார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறுகையில், எங்களது கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் மார்ச் 1ம் தேதி காஞ்சிபுரத்திலும் அண்ணா சிலை முன்பு தரையிலும் உருள்வோம். மார்ச் 4ம் தேதி விழுப்புரத்தில் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகள் முன்பு தரையில் உருளும் போராட்டம், மார்ச் 8ல் ஆண்டிப்பட்டியிலும், மார்ச் 15ல் ஸ்ரீரங்கத்திலும், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகள் முன்பு தரையில் உருளும் போராட்டத்தை நடத்தவுள்ளோம் என்றார்.

Related Stories:

>