ஜம்மு காஷ்மீரில் 4 தீவிரவாதி சுட்டுக்கொலை

அனந்த்நாக்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படை வீரர்கள் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் ஸ்ரீகுவ்வாராவில் உள்ள ஷல்குல் காட்டுப் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அந்த பகுதிக்கு விரைந்த வீரர்கள், தீவிர தேடுதல் ேவட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அடர்ந்த புதர்களுக்கு இடையே மறைந்து இருந்த தீவிரவாதிகள், வீரர்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தினார்கள். இதற்கு வீரர்கள் கொடுத்த பதிலடியில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தீவிரவாதிகள் யார், எந்த தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. பார்சுல்லாவில் உள்ள பாக்தாத்தில் கடந்த 19ம் தேதி தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் 2 போலீசார் வீரமரணம் அடைந்தனர். இதேபோல், சோபியான் மாவட்டத்தின் பத்காம் பகுதியில் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>