மார்ச் 1ம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவச கொரோனா தடுப்பூசி போடப்படும்: பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு..!

டெல்லி: நாடு முழுவதும் மார்ச் 1ம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவச கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.  இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14, 037 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் நலமடைந்தோரின் எண்ணிக்கை 1,07,26,702-ஆக உள்ளது. அதேபோல் இதுவரை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை 1,21,65,598-ஆக உள்ளது.

இந்த நிலையில், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: நாடு முழுவதும் மார்ச் 1ம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவச கொரோனா தடுப்பூசி போடப்படும். மேலும், 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு பெரிய நோய் ஏதேனும் இருந்தால் முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகளில் இலவசமாக கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ள நிலையில், தனியார் மருத்துவமனைகளில் விரைவில் கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்படும், இதனையடுத்து, தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசிக்கு பணம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தனியார் மருத்துவமனைகளில் செலுத்த வேண்டிய கட்டணம் குறித்து உற்பத்தியாளர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகங்களிடம் ஆலோசனை செய்த பின்னர் 3, 4 நாட்களுக்குள் இதுகுறித்த விரிவான தகவலை தெரிவிக்க உள்ளோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>