நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் கார்த்திகேயினி வீட்டில் சோதனை: விஐபி பெயர் அடங்கிய 6 முக்கிய டைரிகள் சிக்கின

சென்னை: தமிழக நெடுஞ்சாலைத்துறை இணை தலைமை பொறியாளர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், லஞ்ச பெற்றதற்கான 6 டைரிகள், நகை ரசிதுகள், வங்கி கணக்குகளை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தமிழக நெடுஞ்சாலைத்துறை இணை தலைமை பொறியாளராக கார்த்திகேயினி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் நெடுஞ்சாலை துறையில் ஒப்பந்தம் விடுவதில் பல கோடி ரூபாய் ஒப்பந்தம் எடுக்கும் தனியார் நிறுவனங்களில் இருந்து பெற்றதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தொடர் புகார்கள் வந்தது. இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இணை தலைமை பொறியாளர் கார்த்திகேயினி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று சென்னை வெட்டுவாங்கேணியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை இணை தலைமை பொறியாளர் கார்த்திகேயினி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு தொடர்பாக அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது அவரது வீட்டில் இருந்து லஞ்சம் பணம் பரிவர்த்தனை குறிப்புகள் அடங்கிய 6 டைரிகள், தங்க நகைகள் வாங்கிய ரசீதுகள், குத்தகை ஒப்பந்தம் ரசீதுகள், வங்கி கணக்கு புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. நான்கு சக்கர வாகனத்தின் ஆர்சி.புத்தகங்கள் மற்றும் சொத்துப் பட்டியல் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. வங்கி கணக்கு புத்தகங்களில் உள்ள பணம் குறித்து அதிகாரிகள் கணக்காய்வு செய்து வருகின்றனர்.

Related Stories: