செவிமடுக்காத அதிமுக அரசிடம் போராடாதீர்கள்!.. திமுக தலைவர் மு.க ஸ்டாலின் ட்வீட்

சென்னை: போராடும் அங்கன்வாடி ஊழியர்களின் கோரிக்கைக்குச் செவிசாய்க்காமல் அவர்களைக் கைது செய்வதா? என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். கடலூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கடலூரில் இன்று மாவட்ட ஆட்சியர் பழைய அலுவலகம் அருகே சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதாவது சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர் அனைவரையும் முழு நேர அரசு ஊழியராக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஒன்றிய செயலாளர் எஸ்.கற்பகம் உள்பட 40 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் இது குறித்து டிவிட்டரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில்; போராடும் அங்கன்வாடி ஊழியர்களின் கோரிக்கைக்குச் செவிசாய்க்காமல் அவர்களைக் கைது செய்வதா?, தேர்தலுக்காக வழக்குகள் வாபஸ் என நாடகமாடும் தமிழக அரசு மறுபக்கம் கைது கொடுமையை அரங்கேற்றுகிறது. செவிமடுக்காத அதிமுக அரசிடம் போராடாதீர்கள்; திமுக அரசு உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் எனவும் உறுதி அளித்தார்.

Related Stories: