டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட ஆய்வில் தமிழகத்தில் 32% பேருக்கு கொரோனா எதிர்ப்பு சக்தி: பெரம்பலூர் மாவட்டத்தில் அதிகம்

சென்னை: தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் பொதுமக்களின் ரத்தத்தில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியின் அளவை கொண்டு கொரோனா எந்த நிலையில் உள்ளது என்பது அறியும் வகையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 32 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது தெரியவந்துள்ளது.இதன்படி தமிழகத்தின் 37 மாவட்டங்களில் மொத்தம் 26,301 மாதிரிகள் சேரிக்கப்பட்டது. ஒரு மில்லியன் மக்கள் தொகைக்கு 300 பேர் என்ற விகிதத்தில் 888 தொகுப்புகளில் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டது. இதன்படி கிராம பஞ்சாயத்துகளில் 410, டவுன் பஞ்சாயத்துகளில் 169, நகராட்சிகள் 104, மாநகராட்சிகளில் 205 தொகுப்புகளில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டது.

இவற்றை ஆன்டிபாடி முறையில் சோதனை செய்ததில் 32.1 சதவீத பேரின் ரத்த மாதிரிகளில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது தெரியவந்துள்ளது. ஆண்களில் 32.8 சதவீதம் பேருக்கும், பெண்களில் 31.1 சதவீதம் பேருக்கும் எதிர்ப்பு சக்தி உள்ளது.

மாநகராட்சிகளில் 38.5 சதவீதம் பேரும், நகராட்சிகளில் 39.5 சதவீதம் பேருக்கும், டவுன் பஞ்சாயத்துகளில் 33.6 சதவீதம் பேருக்கும், கிராம பஞ்சாயத்துகளில் 26.3 சதவீதம் பேருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது.சுகாதார மாவட்டங்களில் பெரம்பலூரில் அதிகபட்சமாக 49 சதவீதமும், சங்கரன்கோவிலில் 47.4 சதவீதமும், பரமக்குடியில் 47.1 சதவீதமும், செய்யூரில் 47 சதவீதமும், தேனியில் 45.2 சதவீதம் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. குறைந்த பட்சமாக நீலகிரியில் 12.1 சதவீதம் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது.

* சென்னையில் 40.9 சதவீதம்

சென்னையில் மொத்தம் 3613 பேரிடம் ஆய்வு செய்யப்பட்டது. இதில் 40.9 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது தெரியவந்துள்ளது.

Related Stories: