காவிரி-குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டம்: முதல்வருக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து

சென்னை: காவிரி - குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டமானது வரலாற்றுச் சிறப்பு மிக்க திட்டம், தமிழக விவசாயிகள் மற்றும் பொது மக்கள் நலன் காக்கும் விதமாக செயல்படும் தமிழக அரசு மற்றும் முதல்வருக்கும் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: காவிரி - குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியிருப்பதன் மூலம் திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்கள் பயன்பெறும். அதாவது காவிரி - தெற்கு வெள்ளாறு - வைகை - குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்தின் முதல் கட்டத்திற்கும், ரூ.3,384 கோடி மதிப்பில் விரிவாக்கம், புனரமைத்தல் மற்றும் நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் காவிரி உபவடிநிலத்தில் உள்ள நீர்ப்பாசன உள்கட்டமைப்புகளை புனரமைக்கும் பணிகளுக்குஅடிக்கல் நாட்டியிருக்கிறார். எனவே தமிழக முதல்வர் விவசாயத்திற்கும், பொது மக்களுக்கும் தண்ணீர் தட்டுப்பாடு வரக்கூடாது, தண்ணீர் பிரச்சனை எழக்கூடாது, குடிநீருக்கு மக்கள் அலையக்கூடாது என்ற நோக்கத்தில் எடுத்து வரும் நடவடிக்கைகளில் இந்த காவிரி - குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டமானது வரலாற்றுச் சிறப்பு மிக்க திட்டமாக அமைந்திருக்கிறது. எனவே தமிழக விவசாயிகள் மற்றும் பொது மக்கள் நலன் காக்கும் விதமாக செயல்படுகின்ற தமிழக அரசுக்கும், தமிழக முதல்வருக்கு பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: