நாடாளுமன்ற ஆவணங்களை தமிழில் வழங்குக!: குடியரசு துணைத்தலைவருக்கு வி.சி.க. எம்.பி. ரவிக்குமார் வலியுறுத்தல்..!!

சென்னை: நாடாளுமன்ற ஆவணங்களை தமிழில் வழங்குமாறு குடியரசு துணைத்தலைவருக்கு விடுதலை சிறுத்தைகள் எம்.பி. ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார். இந்தியாவின் தொன்மையான தமிழ் மொழியை மத்திய அரசு புறக்கணிப்பதாக ரவிக்குமார் கடிதத்தில் புகார் அளித்துள்ளார். தாய் மொழி நாளையொட்டி எம்.பி.களுக்கு வெங்கய்யா நாயுடு அவரவர் தாயமொழிகளில் கடிதம் எழுதி இருந்தார். குடியரசு துணைத்தலைவருக்கு பதில் கடிதம் அனுப்பிய ரவிக்குமார் தாய்மொழியில் கடிதம் எழுதியதற்கு நன்றி கூறியிருந்தார். இந்து, சமஸ்கிருதம் மீது காட்டும் அக்கரையில் தமிழ் மற்றும் பிற மாநில மொழிகள் மீது மத்திய அரசு காட்டவில்லை என்றும் ரவிக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

Related Stories: