உள்நாட்டு விமானங்களுக்கு கட்டுப்பாடுகள் நீக்கம்

சென்னை: கொரோனா தொற்று பரவல் தடுப்பு ஊரடங்கு காரணமாக சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து நாளொன்றுக்கு 125 விமானங்கள் புறப்பாடு, 125 விமானங்கள் வருகை என 250 விமானங்கள் மட்டுமே இயங்குவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது. தற்போது, தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்துள்ளதால்,  உள்நாட்டு விமான சேவைகளை அதிகரிக்கும்படி சென்னை விமான நிலைய இயக்குநர், தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தார். இவற்றை ஏற்று, தமிழக அரசின் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் இருந்து இயக்கப்படும் விமான சேவைகளுக்கான கட்டுப்பாடுகளை முழுமையாக தளர்த்தி உத்தரவிட்டுள்ளார். இதனால் சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் இருந்து, கொரோனா வைரஸ் ஊரடங்கிற்கு முன்பு இயக்கப்பட்ட 392 (புறப்பாடு 196, வருகை 196) விமானங்களும், பயணிகளின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு அதிகமாகவும் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த எண்ணிக்கை ஒரே நாளில் அதிகரிக்காது என்றும், படிப்படியாக அடுத்த சில தினங்களில் அதிகரிக்கப்படும் என்றும் சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

Related Stories: