தடுப்பூசி செலுத்திய குழந்தை இறந்ததா? ஆய்வு செய்ய தனி குழு அமைப்பு: சுகாதாரத்துறை செயலாளர் தகவல்

சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: நாளொன்றுக்கு 19 முதல் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 35 இடங்களில் கோவாக்சின் செலுத்தும் மையம் உருவாக்கப்பட்டுள்ளது. பெங்களூரு, கேரளா, பீகார் போன்ற மாநிலங்களில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது மிகுந்த சவாலாக உள்ளது. முதியவர்கள், நோய்வாய்பட்டவர்களுக்கு மூன்றாம் கட்டமாக தடுப்பூசி செலுத்துவதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.

தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்து கட்சியினருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது. தமிழகத்தில் 14.8 லட்சம் தடுப்பூசிகள் இருப்பு உள்ளது. பிரேசில், தென்ஆப்பிரிக்காவில் இருந்து வரக்கூடிய பயணிகளுக்கு வரும்போதே அந்தந்த நாடுகளில் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறையிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவையில் ‘‘பெண்டா வேலண்ட்” என்ற தடுப்பூசி குழந்தைக்கு செலுத்தப்பட்டது. இறப்புக்கும் கொரோனா தடுப்பூசிக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை. குழந்தையின் இறப்பு குறித்து ஆய்வு செய்ய தனியாக சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

Related Stories: