அயோத்தி என்ற பெயரை பகல் வேடம் போடும் பன்னீர்செல்வம் உச்சரிக்கலாமா?”.. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

தேனி: மார்ச் 14-ம் தேதி திருச்சியில் திமுகவின் மாநில மாநாடு நடைபெறும் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியது. முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் என அனைவரும் சூறாவளி பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற மக்களின் குறைகேட்கும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் பங்கேற்று, மக்கள் அளித்த கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு, அவர்களிடம் நேரிலும் குறைகளைக் கேட்டறிந்தார்.

பின்னர் பேசிய அவர்; ஆட்சிக்கு வந்தால் வெற்றிலை விவசாயத்துக்கென தனி குழு அமைக்கப்படும். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கிராமங்களில், அடிப்படை வசதிகள் மேம்படுத்தி தரப்படும். என் மீது மக்கள் வைத்த நம்பிக்கையை காப்பாற்றுவேன். 3 மாதத்தில் ஆட்சி மாற்றம் வரும்; மக்கள் முகங்கள் மலரும். தேனி மாவட்ட மக்களுக்கு நியூட்ரினோ திட்டத்தின் அச்சத்தை ஓபிஎஸ் போக்கவில்லை. ஜெயலலிதா, சசிகலா, பழனிசாமி என யாருக்கும் ஓபிஎஸ் உண்மையாக இல்லை. அயோத்தி என்ற பெயரை பகல் வேடம் போடும் பன்னீர்செல்வம் உச்சரிக்காலாமா?

பன்னீர்செல்வம் திறமையற்றவர் என்பதை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவே சொல்லி இருக்கிறார். நிர்வாகத் திறமையற்றவர் பன்னீர்செல்வம் என்பதற்கு ஜெயலலிதாவின் கடிதத்தை தவிர வேறு சான்று இல்லை. சசிகலா, இளவரசன், சுதாகரனுக்கு சொத்துக்கள் வசூல் செய்துகொடுத்தது பழனிசாமியும், பன்னீர்செல்வமும் தானே. கைலாசநாதர் கோவில் பூசாரி தற்கொலையின் மர்மம், மணல் கொள்ளை, தெருவிளக்கு முறைகேடு, பினாமி கான்டிராக்டர்கள்.. என்று பன்னீர்செல்வம் மீதான குற்றச்சாட்டுகளை அடுக்கிக்கொண்டே போகலாம். இனி என்ன நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் என கூறினார்.

மார்ச் 14ம் தேதி திமுக மாநில மாநாடு

தொடர்ந்து பேசிய அவர்; மார்ச் 14-ம் தேதி திருச்சியில் திமுகவின் மாநில மாநாடு நடைபெறும் என மு.க.ஸ்டாலின் என அறிவித்தார். திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும்; அது மக்களின் வெற்றியாக அமையும். தேர்தலில் வெற்றிமுகட்டை எட்டுவதற்கான பயணத்தில் திமுகவின் 11-வது மாநில மாநாடு திருச்சியில் நடக்கிறது எனவும் கூறினார்.

Related Stories: