தொடர்ந்து மிரட்டும் கொரோனா வைரஸ்...! உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 11 கோடியாக உயர்வு: 24.39 லட்சத்தை தாண்டியது உயிரிழப்பு

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24.39 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 2,439,135 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 110,406,112 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 85,310,219 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 96,023 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சீனாவின் உகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு வருடங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.  உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும், 4-வது இடத்தில் ரஷ்யாவும் உள்ளது. இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11 கோடியை தாண்டி உயர்ந்து வருகிறது.

இதன்படி உலகம் முழுவதும் தற்போது 11,04,17,572 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 8,53,12,868 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 24 லட்சத்து 39 ஆயிரத்து 763 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 22,663,798 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 96,011 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

Related Stories: