‘டூல்கிட்’ விவகாரத்தில் நிகிதாவை கைது செய்ய நீதிமன்றம் 3 வாரம் தடை

மும்பை: விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக டிவிட்டரில் கருத்து தெரிவித்த ஸ்வீடன் நாட்டு சுற்றுச்சுழல் ஆர்வலர் கிரெட்டா தன்பர்க் சர்ச்சைக்குரிய ‘டூல்கிட்’ ஒன்றை பகிர்ந்தார். இதில் போராட்டத்தில் பங்கேற்பவர்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் இடம் பெற்றிருந்தன. இந்த டூல்கிட் மூலம் சர்வதேச அரங்கில் இந்தியாவின் பெயரை கெடுக்க சதி நடந்திருப்பதாக டெல்லி போலீசார் குற்றம்சாட்டினர். மேலும் காலிஸ்தான் பிரிவினைவாதிகளின் சதிதிட்டத்திற்கு உதவியதாக பெங்களூரு சுற்றுச்சூழல் ஆர்வலரான 21 வயது இளம்பெண் திஷா ரவி தேச துரோக வழக்கில் கைதானார்.

இந்த டூல்கிட் உருவாக்கியதில் தொடர்புடைய மும்பை பெண் வக்கீல் நிகிதா ஜேக்கப் மற்றும் புனே பொறியாளர் சாந்தனு மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. இதனால், அவர்கள் தலைமறைவாகினர். இந்நிலையில், நிகிதா தரப்பில் மும்பை நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நிகிதாவுக்கு ஜாமீன் வழங்கிய மும்பை நீதிமன்றம், 3 வாரத்திற்குள் டெல்லி நீதிமன்றத்தை அணுகுமாறு உத்தரவிட்டது.

Related Stories: