உயர்மட்ட மேம்பாலப் பணிக்கு எதிராக வழக்கு.: அனுமதி இல்லாமல் நிலம் கையகப்படுத்தக் கூடாது என ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கோவை அவிநாசி சாலையில் உயர்மட்ட மேம்பால பணிகளுக்கு நிலம் கையகப்படுத்தக் கூடாது என சென்னை ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை, ரூ.1,621 கோடி மதிப்பீட்டில் 10.10 கிலோ மீட்டர் தூரத்துக்கு உயர்மட்ட பாலம் கட்டும் பணி, மாநில நெடுஞ்சாலைத் துறையினரால் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. பீளமேடு, லட்சுமி மில் சந்திப்பு, நவ இந்தியா உள்ளிட்ட இடங்களில் தூண்கள் அமைக்கும் பணி  நடைபெற்றுவருகிறது.

இந்தநிலையில் இந்த திட்டத்துக்கு எதிராக நில உரிமையாளர்கள் 8 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அவரது, கட்டட உரிமையாளர்களுக்கு எந்தத் தகவலும் தெரிவிக்காமல், நிலம் கையகப்படுத்துவது சட்டவிரோதம் என கூறி இருந்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணையின் போது புகைப்படங்களைப் பார்த்த நீதிபதி உரிய நோட்டீஸ் கொடுக்காமல் எப்படி இவ்வளவு பெரிய கான்கிரீட் தூண்கள் அமைக்கப்பட்டு இருப்பது தெளிவாக தெரிகிறது.

இதனால் கோவை அவிநாசி சாலையில் உயர்மட்ட மேம்பால பணிகளுக்கு நிலம் கையகப்படுத்தக் கூடாது என சென்னை ஐகோர்ட் ஆணையிட்டது. நில கையகப்படுத்தும் சட்டத்தின் விதிகளை மீறாமல் அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுரை வழங்கியுள்ளனர்.

Related Stories: