புதுச்சேரி துணை நிலை ஆளுநராக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கூடுதல் பொறுப்பு

புதுச்சேரி: புதுச்சேரி துணை நிலை ஆளுநராக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பிலிருந்து கிரண்பேடியை நீக்கி குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரி அரசு, கிரண்பேடி இடையே மோதல் நிலவி வந்த நிலையில் குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார். கிரண் பேடியை நீக்கக்கோரி புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அண்மையில் கடிதம் அளித்த நிலையில் குடியரசு தலைவர் மாளிகை அறிவித்துள்ளது. புதுச்சேரியில் அடுத்தடுத்து அரசியல் திருப்பங்கள் நடைபெற்று வரும் நிலையில் துணை நிலை ஆளுநர் பொறுப்பு தமிழிசையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Related Stories: