ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் இளம்பெண் பலாத்காரம்: பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பிரதமர் ஸ்காட் மோரிசன் மன்னிப்பு.!!!

சிட்னி: ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் சக ஊழியர் ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக புகார் தெரிவித்த பெண்ணிடம் அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் மன்னிப்பு கேட்டுள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் பாதுகாப்புத்துறை அமைச்சர் லிண்டா ரெனால்ட்ஸ் அலுவலகத்தில் வைத்து பிரதமர் மோரிசனின் ஆளும் கட்சி உறுப்பினரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக பெண் ஒருவர் குற்றம்சாட்டியிருந்தார். தொடர்ந்து, 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது குறித்து அந்த பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அப்பெண்ணின் புகாரை ஏற்ற காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பாலியல் பலாத்கராத்திற்கு ஆளான பெண் பாதுகாப்புத்துறை அமைச்சர் லிண்டா ரெனால்ட்ஸ் அலுவலகத்தில் உள்ள மூத்த அதிகாரிகளிடம் இதை கூறியிருக்கிறார். இந்த புகார் தொடர்பாக தனக்கு தகவல் வந்ததாகவும் பாதுகாப்பு அமைச்சர் ஒப்புக்கொண்டார்.  இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேட்டியளித்த ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், இப்படி சம்பவம் நடந்திருக்க கூடாது.

இதற்காக நான் மன்னிப்புக்கேட்டுகொள்கிறேன். பணியிடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுவதை நான் உறுதி செய்ய விரும்புகிறேன் என்றும் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட பெண் பிரிட்டானி ஹிக்கின்ஸ் தனது வேதனையை மேலதிககாரிகளிடம் தெரிவித்தபோது, பெரிய அளவில் ஆதரவு கிடைக்கவில்லை என்றும் தெரிவித்ததாகவும் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறத்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்றும் பிரதமர் உறுதியளித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் நேற்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்தபோது, இரவு நேரத்தில் நிகழ்ச்சிக்கு ஒன்றுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும்போது, நாடாளுமன்றத்தில் உடன் பணிபுரியும் மூத்த அதிகாரி ஒருவர் என்னை காரில் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறேன் என்று கூறினார். சக ஊழியர் என்று நான் அவருடன் காரில் சென்றேன். ஆனால், அவர், வீட்டுக்கு என்னை அழைத்து செல்லாமல் காரை நாடாளுமன்றத்துக்கு ஓட்டிச் சென்றார். நான் அப்போது குடிபோதையில் இருந்தேன். தொடர்ந்து, ஆஸ்திரேலிய பாதுகாப்புத் துறை அமைச்சர் லிண்டா ரெனால்ட்ஸ் அலுவலகத்தில் இரவு தூங்கிவிட்டேன்.

கண்விழித்த பார்த்தபோது, அந்த மூத்த அதிகாரி பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். நிறுத்துங்கள்! என்னை விட்டுவிடுங்கள். என்று கூறி நான் அழத்தொடங்கினேன். கத்தினேன். மேலும், நாடாளுமன்றத்தை விட்டு வெளியே சென்றபோது, எந்த காவலாளியும் எனக்கு உதவ முன்வரவில்லை என்றார். இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்தால் ஆதரவு கொடுக்கிறேன் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ரொனால்ட் கூறினார். பிறகு, பாலியல் வன்கொடுமை செய்த அதிகாரி அமைச்சரின் அலுவலகத்திலிருந்து நீக்கப்பட்டுவிட்டார் என்று தெரிவித்தார்.

Related Stories: