3 ஆண்டுகளாக வெட்டாறு பாலம் கைப்பிடி சுவர் இடிந்து கிடக்கும் அவலம்: கண்டு கொள்ளாத அதிகாரிகள்

திருவையாறு: திருவையாறு அடுத்துள்ள அம்மன்பேட்டை வெட்டாறு பாலம் கைப்பிடி சுவர் கடந்த 3 ஆண்டுகளாக இடிந்து கிடக்கிறது. இதை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் சென்று வருகின்றனர். திருவையாறு அடுத்த அம்மன்பேட்டை வெட்டாறு பாலம் பழுதடைந்துள்ளது. இந்த ஆறு பாசனத்திற்கும் பெரும்பாலன நேரத்தில் வடிகாலாகவும் பயன்பட்டு வருகிறது. திருக்காட்டுப்பள்ளி கிழக்கே சுமார் 50 க்கும் மேற்பட்ட கிராமங்கள் விவசாய பணிகளுக்கும் அதிக தண்ணீர் வரும் காலங்களில் கோனகடுங்கலாறு, கிராமங்களில் இருந்து வரும் உபரி நீரை வடிகாலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்.

திருவையாறுதஞ்சை தேசிய நெடுஞ்சாலை அம்மன்பேட்டையில் சுமார் 35 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட பாலம். இந்த பாலம் வழியாக ஒரு நாளைக்கு ஆயிரகணக்கான இரண்டு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள் கடந்து செல்கின்றது. பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள், உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகள் என பலதரப்பட்ட மக்கள் இப்பாலத்தை கடந்துதான் செல்கிறார்கள். இந்த பாலத்தின் கைபிடி சுவர் 3 வருடத்திற்கு முன் உடைந்து கம்பிகள் தொங்கி கொண்டு உள்ளது. இரவு நேரங்களில் மின் விளக்குகள் கூட இல்லாத நிலையில் உள்ளது.

இதனால் வாகன ஓட்டிகளுக்கு எந்த நேரத்திலும் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. அரசு எந்த வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த பகுதியில் வேக கட்டுப்பாட்டு, கோடுகள் கூட வரையப்படவில்லை. பாலத்தின் கைப்பிடி சுவர் நாளுக்கு நாள் மிகவும் மோசமாக உள்ளது. இது குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிகாரிகளுகம், அரசியல் கட்சியினரும் இந்த பாலம் வழியாக சென்று வருகின்றனர். அவர்கள் கூட இதை கண்டுகொள்ளவில்லை. பெரும் விபத்துக்கள் ஏற்படுவதற்கு முன் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பாலத்தின் கைப்பிடியை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: