சென்னை வியாபாரியை கைது செய்த உ.பி.போலீஸ்..: கோவர்த்தன மலை கல் விற்பனை புகாரில் நடவடிக்கை

சென்னை: கோவர்த்தன மலை கற்களை விற்பனை செய்த புகாரின் பெயரில் சென்னை வியாபாரியை உ.பி. போலீசார் கைது செய்துள்ளனர். கிருஷ்ணரை தொடர்பு படுத்தி கல் வியாபாரத்தில் ஈடுப்பட்ட ஆன்லைன் விற்பனை நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி உள்ளிட்டவர்கள் மீதும் நடவடிக்கை பாய்ந்துள்ளது. உத்திரபிரதேச மாநில மதுரா மாவட்டத்தில் உள்ள கோவர்த்தன மலை இந்துக்களின் புனித தளமாக கருதப்படுகிறது.

இங்கு உள்ள கோவர்த்தன கிரி மலையை கொடை போல் தங்கி பிடித்து ஆயர்களை கத்தார் கிருஷ்ணர் என்று புராணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவர்த்தன கிரி மலையில் உள்ள கற்கள் வீட்டில் இருந்தால் செல்வம் பெருகும் என்று சில பத்திரிக்கைகளிலும், ஆன்லைனிலும் விளம்பரம் செய்துள்ளனர். சிறிய அளவிலான ஒரு கல்லின் விலை ரூ.5,175 என்றும் அதில் குறிப்பிட்டு இருந்தனர்.

அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி உத்திரபிரதேச மாநில சமூக ஆர்வலர்கள் போர்க்கொடி தூக்கினர். சென்னை கோடம்பாக்கம் ரங்கராஜா புரத்தை சேர்ந்த பிரேம் குமார் என்பவரும் புகாருக்கு உள்ளனர். இவர் கோடம்பாக்கத்தில் பூஜை பொருட்களை விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்த உத்திரபிரதேச மாநில போலீசார், தனிப்படை ஒன்றை சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

கடை உரிமையாளர்  பிரேம் குமாரை தனிப்படை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய பின்னர் உத்திரபிரதேச மாநிலத்துக்கு அழைத்து சென்றனர். இதுபோல பிரபல ஆன்லைன் விற்பனை நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, துணை நிறுவனர் மற்றும் மதுரா பகுதியை சேர்ந்த இடைத்தரகர்கள் ஆகியோருக்கு எதிராகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: