வரும் 25-ம் தேதி மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி: கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பு..! பாஜக மேலிட தலைவர் சி.டி.ரவி தகவல்

சென்னை: வரும் 25-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் தமிழகம் வருகிறார் என பாஜக மேலிட தலைவர் ரவி தெரிவித்துள்ளார். 25-ம் தேதி கோவை வர உள்ளார். வரும் 19-ம் தேதி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னைக்கும், 21-ல் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் சேலத்திற்கும் வருகின்றனர் எனவும் கூறினார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. ஆங்காங்கே அரசியல் தலைவர்கள் அதிரடி பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கும் தேசிய கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் அவ்வப்போது தமிழகம் வந்த வண்ணம் உள்ளனர்.

அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கும் பாஜகவின் முக்கிய தலைவர் அமித்ஷாவின் வருகையைத் தொடர்ந்து, திமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வந்து பிரச்சாரம் மேற்கொண்டார். இதை தொடர்ந்து இன்று மீண்டும் ராகுல் காந்தி தமிழகம் வந்திருக்கும் நிலையில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி தமிழகம் வந்திருக்கிறார்.

இந்த நிலையில், பிரதமர் மோடி வரும் பிப்ரவரி 25ஆம் தேதி மீண்டும் தமிழகம் வரவிருப்பதாக பாஜக மாநில பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார். பிப்ரவரி 21ஆம் தேதி பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சேலம் வரவருப்பதாகவும் பிப்ரவரி 19ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகம் வர வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 25 ஆம் தேதி கோவைக்கு வரும் பிரதமர் மோடி அரசு மற்றும் பாஜக நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: