விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருப்போரூர்: கானத்தூரில் உள்ள திரையரங்கை கண்டித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை அருகே கானத்தூர் கிழக்கு கடற்கரை சாலையில் பிரபல தனியார் கேளிக்கை மையம் கடந்த 20 ஆண்டுகளாக இயங்குகிறது. இங்கு அதிநவீன திரையரங்குகள், ஷாப்பிங் மால், மதுபானக்கூடம் செயல்படுகிறது. கடந்த கொரோனா ஊரடங்கு காரணமாக 8 மாதங்களாக மூடப்பட்டு இருந்த இந்த வளாகம், சமீபத்தில் திறக்கப்பட்டது. இங்கு, ஏற்கனவே ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வந்த 40க்கும் மேற்பட்டோருக்கு வேலை இல்லை என நிர்வாகம் கூறியதாக தெரிகிறது. இதை கண்டித்தும், உள்ளூர் இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் வேலை வாய்ப்பு வழங்க கோரியும், தனியார் திரையரங்கு நிர்வாகம் ஆக்கிரமித்துள்ள 2.5 ஏக்கர் நிலத்தை மீட்கக் கோரியும் கானத்தூர் கேளிக்கை விடுதி முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. திருப்போரூர் வடக்கு ஒன்றிய செயலாளர் விடுதலைநெஞ்சன் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட செயலாளர் அ.ந. பெருமாள் வரவேற்றார். காஞ்சிபுரம் மண்டல செயலாளர் சூ.க.விடுதலைச் செழியன், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் சூ.ர.ராஜ்குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

Related Stories: