விரைவில் சட்டப்பேரவை தேர்தல் தடையற்ற மின்சாரம் அளிப்பதை உறுதி செய்ய வேண்டும்: ஊழியர்களுக்கு மின்வாரியம் அறிவுறுத்தல்

சென்னை: விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தடையற்ற மின்சாரம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என ஊழியர்களுக்கு மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் வீடு, தொழிற்சாலை, விவசாயம், வணிகம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 3 கோடிக்கும் அதிகமான மின்இணைப்புகள் உள்ளன. தற்போதைய நிலவரப்படி தமிழகத்தின் ஒட்டுமொத்த மின்தேவையின் அளவு 12,500 மெகாவாட்டுக்கும் மேல் உள்ளது. இது வரும்காலங்களில் மேலும் அதிகரிக்கும். அதாவது அடுத்தடுத்த மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்.  =கூடுதலாக சட்டப்பேரவை தேர்தலும் இதே காலக்கட்டத்தில் நடக்கவுள்ளது.எனவே, கோடைகாலத்தில் எவ்வளவு மின்சாரம் தேவைப்படுகிறதோ, அதை பூர்த்தி செய்வதற்கு வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தடையற்ற மின்சாரம்  வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என ஊழியர்களுக்கு மின்வாரியம்  அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மின்வாரிய ஊழியர் ஒருவர் கூறியதாவது: மின்வாரியம் கோடைகாலத்தில் தேவைப்படும் கூடுதல் மின்தேவையை சமாளிக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையில் வரும் காலங்களில் மின்சாரம் அதிகமாக தேவைப்படும். தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமானது, தடையற்ற மின்விநியோகத்தை சிறந்த முறையில் வழங்க முயற்சித்து வருகிறது. தலைமைப் ெபாறியாளர்கள், கண்காணிப்பு ெபாறியாளர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் என அனைவரும் மின்நிலையம், துணை மின்நிலையம், அனல்மின்நிலையம், அணைகள் மற்றும் பிற உற்பத்தி மற்றும் பகிர்மானப்பிரிவுகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

முன்னதாகவே நுண்ணறிவுப்பிரிவினரிடம் தகவல்களை சேகரித்து வைத்தால், அவசர சூழலில் உதவியாக இருக்கும். உள்ளூர் காவல்துறையிடமும் தொடர்பு கொண்டிருப்பதன் மூலம் ஏதும் சிக்கலின்றி தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் எனக்கூறி மின்வாரியம் அனைத்து தலைமைப் ெபாறியாளர்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதன்படி தடையற்ற மின்சாரம் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: