எம்டிசி பஸ்களில் பயணிக்கும் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் இலவச பாஸ்: அரசு அனுமதி

சென்னை: மூத்த குடிமக்கள் எம்டிசி பஸ்களில் இலவசமாக பயணிப்பதற்கான பஸ் பாஸ் விநியோகம்  மீண்டும் வழங்குவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதுகுறித்து, தமிழக அரசின் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன், மாநகர்  போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: மாநகர் போக்குவரத்துக்கழகத்தின் மேலாண் இயக்குனர், கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக, மூத்த குடிமக்களுக்கான இலவச சலுகை பாஸ்  உள்ளிட்டவற்றை நிறுத்தி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் எம்டிசி பஸ்களில் மூத்த குடிமக்கள் அதிகமாக பயணிப்பதால், இலவச பஸ் பாஸ் வழங்குவதை மீண்டும் கடந்த 1ம் தேதி முதல் (ஏசி பஸ் தவிர) அனுமதிக்க  கோரியிருந்தார். இதையடுத்து மாநகர் போக்குவரத்துக்கழகத்தின் மேலாண் இயக்குனருக்கு, மூத்த குடிமக்கள் அனைத்து எம்டிசி பஸ்களிலும் பயணிப்பதற்கான (ஏசி பஸ் தவிர) இலவச பஸ் பாஸ்/டோக்கன் ஆகியவற்றை விநியோகிக்க அனுமதி  வழங்கப்படுகிறது.

Related Stories: