உடல்நல குறைவு மற்றும் விபத்துகளில் உயிரிழந்த காவலர்களின் குடும்பத்துக்கு 3 லட்சம்

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை நவீன காவல் கட்டுப்பாட்டு அறையில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த கி.ராஜூ, தலைமை காவலர்களாக பணிபுரிந்த பெ.செந்தில்குமார்  மற்றும் எஸ்.சுதாகர், மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்த ப.ராபர்ட், சென்னை பாதுகாப்பு பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்த வே.அமுதன், புளியந்தோப்பு போக்குவரத்து காவல் நிலையத்தில் சிறப்பு  உதவி ஆய்வாளராக பணிபுரிந்த க.யுவராஜ், ஆயுதப்படை 19ம் அணியில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்த க.அன்பரசன், கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் பெண் தலைமை காவலராக பணிபுரிந்த சுதா, ஜெ.ஜெ. நகர் காவல் நிலையத்தில்  தலைமை காவலராக பணிபுரிந்த ப.சரவணகுமார்,

புழல் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்த கலியமூர்த்தி, அடையாறு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்த ம.துரைராஜ், சென்னை விமான நிலைய காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்த  பா.முருகன்,மாதவரம் சாலை போக்குவரத்து புலனாய்வு பிரிவில் தலைமை காவலராக பணிபுரிந்த ரா.தேசிங்கு, புனித தோமையர்மலை ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்து வந்த பிரதாப் உள்ளிட்ட 64 காவலர்கள் பல்வேறு விபத்துகளில்  உயிரிழந்தனர். உடல்நலக் குறைவு மற்றும் விபத்துகளில் உயிரிழந்த 64 காவலர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

Related Stories: