மீஞ்சூர் ஒன்றியத்தில் ஊராட்சி தலைவர்கள் ஆலோசனை

பொன்னேரி: மீஞ்சூர் ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் சங்க ஆலோசனை கூட்டம் மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் சங்கத்தலைவர் வாசுகி மேற்பார்வையில் செயல் தலைவர் நிலவழகன் தலைமையில் முதன்மை கூடுதல் செயல் தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் பாலன், இணை செயலாளர் மாலதி சரவணன், பொருளாளர் பூஷ்ணம் பிரகாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  இந்த கூட்டத்தில் மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய 55 ஊராட்சிகளில் எஸ்சி, எஸ்டி மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளுக்கு ஊராட்சியில் சமுதாயக்கூடம் கட்டித்தரப்படும். மாநில நிதிக்குழு மானியம் 14வது நிதிக்குழு மானியம் விடுவிப்பு குறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறிய துறை செயலாளர், மாவட்ட கலெக்டர் மற்றும் திட்ட இயக்குநருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில், மன்ற தலைவர்கள் கோபி, பிரியா ராஜேஷ், கண்ணன், சதாசிவம், மஞ்சுளா பஞ்சாசரம், லஷ்மி எட்டியப்பன், முனிசுந்தரம், பிரியங்கா துரைராஜ், மங்கை உமாபதி  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: