கட்டுமான பொருட்களின் விலை உயர்வுக்கு எதிர்ப்பு..: விலை உயர்வை கட்டுப்படுத்த அரசுக்கு கோரிக்கை

சென்னை:  சிமெண்ட், ஜல்லி, கம்பி உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் கட்டுனர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அகில இந்திய கட்டுனர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிமெண்ட், ஜல்லி, கம்பி விலை உயர்வால் கட்டுமான தொழிலே முடங்கியுள்ளதாக கூறியுள்ள அவர்கள், நாட்டின் பொருளாதார துறையில் பெரும் பங்குவகிக்கும் கட்டுமான தொழில் நசுக்கப்பட்டு வருவதாகவும் கவலை தெரிவித்துள்ளனர்.

தஞ்சையில் நடைபெற்ற போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் மற்றும் கட்டுமான வல்லுநர்கள் பங்கேற்றனர். இதேபோல் விலை ஏற்றத்தை மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு கட்டுப்படுத்தக் கோரி திருச்சி, கோவை மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் கட்டுமான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Related Stories: