10 ரயில் நிலையங்களில் தனியார் மருத்துவ கிளினிக் அமைக்கலாம்: சென்னை கோட்டம் அழைப்பு

சென்னை: சென்னை கோட்டத்தில் உள்ள 10 ரயில்களில் ஒரு நாளைக்கு 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். இந்த ரயிலில் வரும் பயணிகளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டால் அருகில் உள்ள ரயில்நிலையங்களில் முதல் உதவி சிகிச்சை அளிக்க வேண்டும்.

இந்நிலையில் சென்னை ரயில்வே கோட்டத்தில் மாம்பலம், தாம்பரம், செங்கல்பட்டு, ஆவடி, பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி, ஆம்பூர் மற்றும் மேல்மருவத்தூர் ஆகிய 10 ரயில் நிலையங்களில் மருத்துவ சிகிச்சை மையம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தனியார் மருத்துவமனைகள் ரயில்வே நிபந்தனைகளின்படி சிகிச்சை மையம் அமைக்க அனுமதிக்கப்படவுள்ளன. இதற்காக தனியார் மருத்துவமனை நிர்வாகங்கள் விண்ணப்பிக்கலாம்.

Related Stories: