நடிகர் சிவாஜியின் மகன் எடுத்த முடிவு: நடிகர் திலகம் புகழுக்கு இழுக்குதான் ஏற்படுத்தும்: காங்கிரஸ் கலைப்பிரிவு தலைவர் சந்திரசேகரன் வருத்தம்

சென்னை: காங்கிரஸ் கலைப்பிரிவு தலைவர் சந்திரசேகரன் வெளியிட்ட அறிக்கை: ஒவ்வொவருக்கும் ஒரு அரசியல் இயக்கத்தில் சேர்ந்து பணியாற்றிடும் உரிமை உண்டு என்றாலும், இப்போது நடிகர் திலகத்தின் புதல்வர் சேரவிருப்பது பாஜவில் என்பது தான் முரண்பாடான விஷயமாக இருக்கிறது. கருத்துவேறுபாடுகளால் காங்கிரஸ் கட்சியை விமர்சித்து. வெளியேறிய நடிகர் திலகம் சிவாஜி, அரசியலிலிருந்து விலகியிருந்தாரே தவிர காங்கிரசின் கொள்கைகளிலிருந்து, காமராஜர் பற்றிலிருந்து என்றுமே விலகியதில்லை.

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சியில் எந்தவொரு பிரதிபலனும் எதிர்பாராமல் உழைத்ததோடு மட்டுமல்ல, நேரு, காமராஜர், இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி என அனைத்து தலைவர்களின் அன்பையும் பெற்றிருந்தார் நடிகர் திலகம் சிவாஜி. தான் பதவியை விரும்பவில்லை. எனினும், அவரால் முதலில் சட்டமன்ற உறுப்பினரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், பின்னாளில் மத்திய அமைச்சராகவும், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகவும் உயர்ந்தார்.

எனவே, பாஜகவில் இணைவது என்ற நடிகர் திலகத்தின் புதல்வருடைய முடிவு நடிகர் திலகத்தின் புகழுக்கு இழுக்கு ஏற்படுத்தக் கூடியதாகத் தான் இருக்கும் என்பதை மட்டும் குறிப்பிட விரும்புவதோடு, என்னைப் போன்ற லட்சோப லட்சம் நடிகர் திலகத்தின் ரசிகர்கள், காமராஜர் தொண்டர்களாக, அவர் காட்டிய பாதையான, காங்கிரஸ் பேரியக்கத்தின் வளர்ச்சிப் பணியில் தொடர்வோம்.

Related Stories: