கணினி குற்றங்களை தடுக்கும் வகையில் மாவட்ட வாரியாக 46 சைபர் க்ரைம் காவல் நிலையங்கள் தொடக்கம்: உள்துறை செயலாளர் பிரபாகர் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் கணினி குற்றங்கள் தற்போது அதிகரித்து வருகிறது. இந்த குற்றங்களை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு சார்பில் மாநிலம் முழுவதும் மாவட்டம், நகரங்கள் வாரியாக சைபர் க்ரைம் காவல் நிலையங்கள் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தது. அதன்படி கடந்த ஆண்டு முதற்கட்டமாக சென்னை மாநகர காவல்துறை உள்ள 12 மாவட்டங்களில் சைபர் க்ரைம் காவல் நிலையங்கள் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் கணினி சார்ந்த புகார்களுக்கு உடனுக்குடன் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த திட்டம் வெற்றி பெற்றதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்கள், நகரங்கள் என 46 சைபர் க்ரைம் காவல் நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளது.

புதிதாக தொடங்கப்பட்டுள்ள இந்த காவல் நிலையங்கள் நேற்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதற்கான உத்தரவை உள்துறை செயலாளர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, கணினி தொடர்பாக குற்றங்கள் குறித்து பொதுமக்கள் புதிதாக தொடங்கப்பட்டுள்ள சைபர் க்ரைம் காவல்நிலையங்களில் புகார் அளிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்த காவல்நிலையங்கள் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் இயங்கும் என்றும் புகார்களின் அடிப்படையில் காவலர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: