அதிமுக கொடியை பயன்படுத்தியது சட்டவிரோதம்; அதற்காக சசிகலா மீது நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் சி.வி சண்முகம் பேட்டி

சென்னை: சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்தியது சட்டவிரோதம் என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். 4 ஆண்டுகள் சிறை தண்டனை நிறைவடைந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 27ம் தேதி விடுதலையானார். அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டார். சிகிச்சைக்குப் பின் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் தேவனஹல்லியில் உள்ள ரிசார்ட்டில் தங்கி 7 நாட்கள் ஓய்வுவெடுத்தார். இந்தநிலையில், ஓய்வை முடித்துக்கொண்டு திட்டமிட்டப்படி நேற்று காலை 7.45 மணிக்கு பெங்களூரில் இருந்து சென்னை புறப்பட்டார்.

அப்போது ஓசூர் அடுத்த ஜூஜூவாடி என்ற தமிழக எல்லைப்  பகுதிக்குள் காலை 10.45 மணிக்கு சசிகலாவின் கார் வந்தது. அப்போது, ஓசூர் டிஎஸ்பி மற்றும் மாவட்ட வருாய் அலுவலர் ஆகியோர் காரை வழி மறித்தனர். பின்னர், காரில் இருந்த கட்சிக்  கொடியை அகற்ற வேண்டும் என்று நோட்டீஸ் வழங்கினர். அப்போது போலீசாருக்கும்,  தொண்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், கொடி கட்டப்பட்ட அதிமுக ஒன்றிய கவுன்சிலர் சம்பங்கி என்பரின் காருக்கு மாறினார். அதே காரில் அவர் சென்னை நோக்கி பயணத்தை தொடங்கிய அவர் வழிநெடுகிலும் நின்று இருந்த தொண்டர்களின் வரவேற்பை ஏற்று சரியாக அதிகாலை 4.00 மணிக்கு சென்னை ராமாபுரம் எம்ஜிஆர் இல்லத்திற்கு வந்தடைந்தார்.

இந்நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களை சந்த்தித்து பேசினார். அப்போது; சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்தியது சட்டவிரோதம்; அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

Related Stories: