ஜாக்டோ-ஜியோ மீதான வழக்குகள் ரத்து அரசாணை வெளியீடு

சென்னை: .அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்பட்டதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.  ஜாக்டோ-ஜியோ 2019ல் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது தொடர் வேலை நிறுத்தத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபட்டனர். அவர்களில் சில ஆயிரம் பேர் மீது குற்றவியல் வழக்குகள், ஒழுங்கு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது.  அவற்றை திரும்பப் பெற வேண்டும் என்று அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தி வந்தன. அதையேற்று, முதல்வர் கடந்த வாரம் அறிவிப்பு வெளியிட்டார். இதுதொடர்பாக, தற்போது அரசாணை: l 22.1.19  முதல் 30.1.19 வரை நடந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது தொடரப்பட்டு நிலுவையில் உள்ள ஒழுங்கு நடவடிக்கைகள் அனைத்தும் உடனடியாக ரத்து செய்யப்படுகின்றன.

* மேற்கண்ட போராட்டம் காரணமாக தண்டனை வழங்கி இறுதி ஆணைகள் வெளியிடப்பட்ட நிகழ்வு ஏதாவது இருந்தால் அவை அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது.  

* அதேபோல நிலுவையில் உள்ள குற்றவியல் நடவடிக்கைகள் அனைத்தும் உடனடியாக கைவிடப்படுகின்றன.

Related Stories: