வரும் 8-ம் தேதி முதல் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரடியாக விசாரணை மேற்கொள்வது என நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு

சென்னை: வரும் 8-ம் தேதி முதல் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரடியாக விசாரணை மேற்கொள்வது என முடிவெடுக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி சென்னை உயர்நீதிமன்றம், அதன் மதுரை கிளையில் நேரடி விசாரணை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது கூறப்படுகிறது. நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக தலைமைப் பதிவாளர் குமரப்பன் அறிவிப்பு வெளியிட்டார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதால், மார்ச் இறுதி வாரத்தில் இருந்து, கடந்த 11 மாதங்களாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் நேரடி விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டது.

கடந்த செப்-7-ம் தேதி முதல் 2 வாரங்களுக்கு சோதனை அடிப்படையில் நீதிமன்றத்தில் நேரடி விசாரணை நடத்தப்பட்டது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் கீழமை நீதிமன்றங்கள் ஏற்கனவே திறக்கப்பட்டுள்ள நிலையில், வழக்குகள் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்களுக்கும், சாட்சிகளுக்கும் மட்டும் நீதிமன்றத்துக்குள் வர அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

Related Stories: