சிறுகுன்றா எஸ்டேட்டில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள்-பொதுமக்கள் பீதி

வால்பாறை :  வால்பாறை சிறுகுன்றா பகுதியில் 7 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

வால்பாறையை ஒட்டிய அடர் வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் வால்பாறை எஸ்டேட் பகுதிகள் வழியாக நுழைந்து, வலசப்பாதையில் உள்ள எஸ்டேட்கள் வழியாக வரும்போது, குடியிருப்புகள், சத்துணவு கூடங்கள், ரேஷன் கடைகள், டீக்கடைகள், மளிகை கடைகளை உடைத்து உணவுகளை ருசித்து செல்கிறது.

கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் ஊடுருவிய யானைகள் மீண்டும் வந்த வழியே மீண்டும் வனப்பகுதிக்குள் செல்ல துவங்கி உள்ளதாக வனத்துறையினர் கூறுகின்றனர். குறிப்பாக,  யானைகள் 3 இடங்களில் வனப்பகுதிக்குள் இருந்து வெளியேறுவதாக கூறப்படுகிறது. முருகாளி எஸ்டேட் கேரள இணைப்பு வனப்பகுதி, வில்லோனி, பன்னிமேடு கேரள இணைப்பு வனப்பகுதி  உள்ளிட்ட எஸ்டேட் பகுதிகள் வழியாக நுழைந்து, பல ஆண்டுகளாக யானைகள் பயன்படுத்திய வலசப்பாதைகள் வழியாக மேய்ச்சலில் ஈடுபடுகிறது. இந்நிலையில், மீண்டும் யானைகள் எஸ்டேட் பகுதிகளில் இருந்து வனப்பகுதிக்குள் நுழையத்துவங்கியுள்ளது.

யானைகள் வனப்பகுதியில் இருந்த வந்தபோது ஏற்பட்ட பிரச்சணைகள் மீண்டும் வரலாம், எனவே மீண்டும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருந்து, யானைகளை பார்த்தால் தகவல்களை பரிமாறிக்கொள்ளவேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.இந்நிலையில், காட்டு யானைகள் மானாம்பள்லி காபி எஸ்டேட், ஊசிமலை மட்டம் கெஜமுடி டனல், சிறுகுன்றா, போயம்பாத்தி, சூடக்காடு, பச்சைமலை, குரங்குமுடி, தாய்முடி வறட்டுப்பாறை, சின்னக்கல்லார் உள்ளிட்ட பல்வேறு எஸ்டேட் பகுதிகளில காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளது. இந்நிலையில், நேற்று சிறுகுன்றா எஸ்டேட் பகுதியில் 7காட்டு யானைகள் பகலில் உலா வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: