குடியரசு தின டிராக்டர் பேரணி வன்முறைக்கு பின் 100-க்கும் மேற்பட்டோர் மாயம்!: விவசாயிகள் அதிர்ச்சி தகவல்..!!

டெல்லி: டெல்லி டிராக்டர் பேரணிக்கு பின் போராட்டத்தில் பங்கேற்ற 100க்கும் மேற்பட்டோரை காணவில்லை என விவசாயிகள் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளனர். இந்தியாவின் முதுகெலும்பாக உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் மத்திய பா.ஜ.க. அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற  கோரி ஏறத்தாழ இரண்டு மாதங்களாக விவசாயிகள் தலைநகர் டெல்லியில் முகாமிட்டு உறுதியுடன் போராடி வருகிறார்கள். புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியை முற்றுகையிட்டு போராடி வரும் விவசாயிகள் கடந்த 26ம் தேதி செங்கோட்டையை நோக்கி மாபெரும் டிராக்டர் பிராணி நடத்தினர்.

குடியரசு தினத்தை சீர்குலைக்க கூடாது என்பது போன்ற சில நிபந்தனைகளுடன் டிராக்டர் பேரணிக்கு டில்லி போலீசார் அனுமதியளித்தனர். இதில் பெறும் வன்முறை மூண்டது. போலீஸாருக்கும் , விவசாயிகளில் ஒருபிரிவினருக்கும் இடையே நடந்த மோதலில் 100-க்கும்மேற்பட்ட போலீஸாரும், விவசாயிகளும் காயமடைந்தனர். இந்நிலையில், இப்பேரணி மற்றும் வன்முறை சம்பவத்திற்கு பின் போராட்டத்தில் பங்கேற்ற 100க்கும் மேற்பட்டோரை காணவில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஆய்வு செய்ய 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், மாயமானார் விவரங்களை இந்த குழுவினர் சேகரித்து போலீஸ் அதிகாரிகளிடம் தெரிவிப்பார்கள் என்றும் மயுக்தா கிசான் மோர்ச்சா அமைப்பு கூறியுள்ளது. மேலும் மாயமானவர்கள் பற்றி தகவல் அறிந்தால் தெரிவிப்பதற்கு பிரத்யேக செல்போன் எண்ணையும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

Related Stories: