பதவி கிடைத்ததும் தர்ம யுத்தம் முடிந்துவிட்டது: கோபண்ணா, தமிழக காங்கிரஸ் துணைத் தலைவர்

ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு சசிகலாவின் முழு கட்டுப்பாட்டில் அதிமுக சென்றுவிட்டது. பொதுக்குழு கூடி சசிகலாவை பொதுச்செயலாளராக தேர்வு செய்தார்கள். இந்தசூழலில் சசிகலா முதல்வராக வருவார் என்ற நிலையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்தது. சசிகலா சிறைக்கு செல்லும் சூழலில் எடப்பாடியை முதல்வராக பரிந்துரை செய்து அவர் சிறைக்கு சென்றுவிட்டார். அப்போது, ஓ.பன்னீர் செல்வம், ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றார். பின்னர், பாஜ தலையீட்டின் பேரில் எடப்பாடி, ஓபிஎஸ் இணைய வேண்டிய நிலை வந்தது.

இருவரும் பதவி ஆசை காரணமாக ஒன்றிணைந்தனர். இந்தநிலையில், ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த கமிஷன் அமைக்கப்பட்ட போதே 3 மாதத்திற்குள் அறிக்கை தர வேண்டும் என கூறப்பட்டது. ஆனால், 10 முறை கமிஷன் நீட்டிக்கப்பட்டும் ஆணையத்தின் அறிக்கை வழங்கப்படவில்லை. இதேபோல், ஓ.பன்னீர் செல்வம் விசாரணை ஆணையத்திற்கு அழைக்கப்பட்டார். ஆனால், ஏதாவது காரணம் கூறி அவர் தவிர்த்து வருகிறார். இந்தநிலையில், ஜெயலலிதாவிற்கு அரசுப்பணத்தில் நினைவிடம் அமைப்பது, போயஸ் கார்டன் வீட்டை நினைவில்லமாக மாற்ற திறப்பு விழா நடைபெற்றது.

ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஒருவருக்கு அரசுப்பணத்தில் நினைவகம் எழுப்புவது சரியா. இதேபோல், ஜெயலலிதாவின் சிலை ரகசியமாக வைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. இந்த விஷயங்கள் மிகப்பெரிய கேடுகளை விளைவிக்கும்.

ஜெயலலிதாவின் மரணத்தில் இருக்கும் மர்ம முடிச்சுகளை அவிழ்க்காமல், மர்மம் இருப்பதாக கூறிய ஓ.பன்னீர் செல்வமும், எடப்பாடியும் சேர்ந்துகொண்டு நாட்டு மக்களை ஏமாற்றவும், திசை திருப்பவும் இத்தகைய நிகழ்வுகளை அரங்கேற்றியிருக்கிறார்கள். இவர்கள் யாருமே ஜெயலலிதாவிற்கும், சசிகலாவிற்கும் விசுவாசிகள் கிடையாது. பதவி ஆசையும், சொத்துக்களை பெருக்கிக்கொள்ள வேண்டும் என்பது தான் இவர்களது நோக்கம். மக்களுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்ற நிலையையே இவர்கள் மாற்றியுள்ளார்கள்.   

சசிகலா சிறைக்கு சென்றதால் தான் இன்று அதிமுக உள்ளது. இவர்களின் ஒரே நோக்கம் அதிகாரத்தின் மூலம் பதவி சுகத்தை அனுபவிப்பது தான். அந்த அடிப்படையில் தான் இவர்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஓ.பன்னீர் செல்வம் தொடங்கிய தர்ம யுத்தம் அவர் துணை முதலமைச்சராக பதவி ஏற்றதுமே முடிந்துவிட்டது. முதலமைச்சராக இருந்தவர் இன்று துணை முதலமைச்சராக மாறிவிட்டார். எப்படியாவது பதவியில் இருக்க வேண்டும் என்பதற்காகவே அவர் தர்ம யுத்தம் என்பதை ஆரம்பித்தார். பின்னர், பதவி கிடைத்ததும் அதை அவர் கீழே போட்டுவிட்டார். இவர்கள் யாருமே ஜெயலலிதாவிற்கும், சசிகலாவிற்கும் விசுவாசிகள் கிடையாது. பதவி ஆசையும், சொத்துக்களை பெருக்கிக்கொள்ள வேண்டும் என்பது தான் இவர்களது நோக்கம். மக்களுக்கு தொண்டு  செய்ய வேண்டும் என்ற நிலையையே இவர்கள் மாற்றியுள்ளார்கள்.

* பதவியை தக்க வைக்க எல்லாவற்றையும் மூடி மறைக்கிறார்கள்:  கே.பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்

ஜெயலலிதா மரணத்தின்போது எதிர்க்கட்சிகள் துயரத்தையும், அனுதாபத்தையும் தான் தெரிவித்தன. எதிர்க்கட்சி தலைவர்கள் யாரும் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது என்றோ, அவர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டார் என்றோ அல்லது அவர் இறந்த பிறகு தான் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார் என்றோ சொல்லவில்லை. ஆனால், அதிமுகவில் இருப்பவர்கள் தான் இதை சொன்னார்கள். விசாரணை கமிஷன் வைக்க வேண்டும், சிபிஐ விசாரிக்க வேண்டும் போன்ற பிரச்னைகளை கிளப்பியதே அதிமுக தான்.

அவர்களுக்குள் இருந்த போட்டா போட்டியில் இதுபோன்ற பிரச்னைகளை கிளப்பினார்கள். இதையடுத்து, விசாரணை கமிஷனையும் அமைத்தார்கள். வழக்கமாக ஒரு முதல்வர் இறந்தால் அதில் சந்தேகம் இருந்தால் அதுகுறித்த புகார்களை எதிர்க்கட்சிகள் தான் கிளப்பும். ஆனால், எந்த எதிர்க்கட்சியும் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறவில்லை. அதிமுகவினர் மர்மம் இருப்பதாக கூறினர். பின்னர், ஒன்றாக இணைந்து ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் அமைத்தார்கள். அந்த ஆறுமுகசாமி விசாரணை கமிஷனுக்கு 10வது முறையாக நீட்டிப்பு கொடுத்துள்ளார்கள்.

இதேபோல், ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறிய ஓ.பன்னீர் செல்வத்திற்கு 6 முறை இந்த கமிஷன் சம்மன் அனுப்பி உள்ளது. ஆனால், ஒருமுறை கூட இதுவரை அவர் சாட்சியே சொல்லவில்லை. அவர் எங்கும் வெளிநாடு சென்றுவிடவில்லை சென்னையில் தான் இருக்கிறார். ஆனால், அவர் இதுவரை ஆஜராகவில்லை. இவரே அனைத்தையும் கூறிவிட்டு ஆஜராகவில்லை. ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறிய ஓபிஎஸ் ஏன் இதுவரை ஒரு தடவை கூட ஆஜராகவில்லை.

அனைத்திற்கும் செல்லும் ஓபிஎஸ் ஏன் ஆணையத்திற்கு மட்டும் செல்லவில்லை.  என்னதான் இதற்குள் நடக்கிறது என்பது தெளிவாக தெரியவில்லை. ஜெயலலிதாவிற்கு கோயில் கட்டினாலோ, நினைவிடம் அமைத்தாலோ அனைத்தும் சரியாகிவிடாது. உண்மையிலேயே அதிமுக தொண்டர்களுக்கு ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறிய ஓபிஎஸ் அதை தெளிவுபடுத்த வேண்டும். அதற்காக அவர் ஆஜராகி இருக்க வேண்டும். நீங்கள், ஆட்சியில் இருக்கும்போதே ஒரு விசாரணை நடத்தி ஜெயலலிதா மரணத்தில் இருக்கும் மர்மத்தை கண்டுபிடிக்க தாமதம் ஏன். இதேபோல், கொடநாடு கொள்ளை, கொலை போன்ற சம்பவங்களும் நடந்தது.

அதிமுகவிற்குள் நடக்கும் முடிச்சுகள் இன்னும் அவிழ்க்கப்படாமலேயே உள்ளது. எனவே, ஜெயலலிதா மரணம், கொடநாடு கொள்ளை போன்றவைகளில் உள்ள உண்மையை தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு எடப்பாடிக்கும், ஓபிஎஸ்க்கும் உள்ளது. பதவியை தக்கவைத்துக்கொள்வதற்கு எல்லாத்தையும் மூடிமறைத்துக் கொண்டிருக்கிறார்கள். சசிகலா வந்த பிறகு அவர் எதை அம்பலப்படுத்தப்போகிறார் என்று தெரியவில்லை. இவர்கள் உண்மையான ஜெயலலிதாவின் விசுவாசிகளாக இருந்தால் அவரின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறுவதை தெளிவுபடுத்த வேண்டும்.

மர்ம முடிச்சை ஏன் இதுவரை அவிழ்க்கவில்லை என்ற கேள்வி எழுகிறது. உண்மையான அதிமுக தொண்டர்கள் தேர்தல் நேரத்தில் எடப்பாடி, ஓபிஎஸ்சிடம் இந்த கேள்விகளை எழுப்ப வேண்டும். நிச்சயமாக மக்களும் இதை மறந்துவிடமாட்டார்கள். கொடநாடு கொள்ளை, கொலை போன்ற சம்பவங்களும் நடந்தது. அதிமுகவிற்குள் நடக்கும் முடிச்சுகள் இன்னும் அவிழ்க்கப்படாமலேயே உள்ளது. எனவே, ஜெயலலிதா மரணம், கொடநாடு கொள்ளை போன்றவைகளில் உள்ள உண்மையை தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு எடப்பாடிக்கும், ஓபிஎஸ்க்கும் உள்ளது.

Related Stories: