அதிமுக கட்சிக் கொடியை சசிகலா பயன்படுத்தியது கண்டனத்திற்குரியது..! பொதுச்செயலாளர் ஜெயலலிதா மட்டும்தான்: கே.பி.முனுசாமி

சென்னை: அதிமுகவின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மட்டும்தான், மற்றவர்கள் சுயநலத்திற்காக கூறுகின்றனர். அதிமுகவில் இல்லாத சசிகலா, கட்சிக் கொடியை பயன்படுத்தியது கண்டனத்திற்குரியது என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். 4 ஆண்டு ஜெயில் தண்டனை பெற்று பெங்களூரூ ஜெயிலில் இருந்து வந்த சசிகலா கடந்த 27-ந்தேதி முறைப்படி விடுதலை செய்யப்பட்டார். கொரோனா பாதிப்பு இருந்ததால், தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று மதியம் 12 மணிக்கு ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வெளியே வந்தார்.

அவர் கார் முன் இருக்கையில் அமர்ந்திருந்தார். அவரது காருக்கு முன்னும் பின்னும் பல கார்கள் அணிவகுத்து வந்தன. சசிகலாவின் காரில் அ.தி.மு.க. கொடி பொருத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் சசிகலா காரில் பொருத்தப்பட்டிருந்த அதிமுக கொடி குறித்து டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா என்பதால் தான் அதிமுக கொடி காரில் பொருத்தப்பட்டது. சசிகலா காரில் அதிமுக கொடி பொருத்த எல்லா உரிமையும் உள்ளது. அதில் எந்த சர்ச்சையும் இல்லை. அதிமுகவை மீட்டெடுக்ககவே அமமுக தொடங்கப்பட்டது. வழக்கு நிலுவையில் இருப்பதால் சசிகலா அதிமுக பொது செயலாளர்தான்.

அதிமுகவின் பொதுச்செயலாளர் சசிகலா என்பதால்  பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் சசிகலாவுக்குதான் இருக்கிறது என்று தெரிவித்தார். இந்நிலையில் இதுகுறித்து அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது; அதிமுகவின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மட்டும்தான், மற்றவர்கள் சுயநலத்திற்காக கூறுகின்றனர். அதிமுகவில் இல்லாத சசிகலா, கட்சிக் கொடியை பயன்படுத்தியது கண்டனத்திற்குரியது மேலும், பல்வேறு கோணங்களில் அதிமுகவை கைப்பற்ற தினகரன் முயற்சித்து வருகிறார். அதிமுகவுக்கு எதிராக செய்த தவறுகளை ஒப்புக்கொண்டு தினகரன் மன்னிப்பு கடிதம் தர வேண்டும். அதனையடுத்து, இதுபற்றி தலைமை பரிசீலனை செய்யும். அதிமுக - அமமுக அணைக்கப்படுமா என்ற கேள்விக்கு கே.பி.முனுசாமி பதிலளித்துள்ளார்.

Related Stories: