தொழிலாளர்கள் உரிமை கோராத காரணத்தால் 5 கோடி நிதியை திருப்பி அனுப்பி வைத்த நிறுவனங்கள்

சென்னை: தொழிலாளர்கள் உரிமை கோராத காரணத்தால் கடந்த நிதி ஆண்டில் பல்வேறு நிறுவனங்கள் 5 கோடி நிதியை தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்திற்கு திருப்பி செலுத்தியுள்ளன. அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு தேவையான பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்த தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம் உருவாக்கப்பட்டது. இதில் பல்வேறு தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் நிறுவனங்கள், தோட்ட நிறுவனங்கள் அடங்கும். இந்த நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் தொழிலாளர் நல நிதியாக ஆண்டு ஒன்றுக்கு 10 செலுத்த வேண்டும். இதேபோன்று தொழிலதிபர்கள் ஒரு தொழிலாளிக்கு ₹20 செலுத்த வேண்டும். அரசு தன்னுடைய பங்குத் தெகையாக 10 செலுத்தும்.

இதன் மூலம் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதை தவிர்த்து தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து பயிற்சி தேர்வுக்கான கட்டணம், விபத்து மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித் தொகை, இயற்கை மரண உதவித் தொகை உள்ளிட்ட உதவித் தொகைகள் வழங்கப்படுகின்றன.

இதை தவிர்த்து தொழிலாளர்களுக்கு அந்த நிறுவனம் சார்பில் போனஸ், ஊதியம் உள்ளிட்ட தொகைகள் வழங்கப்பட வேண்டி இருக்கும். இதை பெற வேண்டிய தொழிலாளர்கள் வேறு நிறுவனங்களுக்கு மாறி சென்று விடுகின்றனர். அதன் பிறகு அந்த தொகை வாங்குவது இல்லை. இப்படி உரிமை கோரப்படாத தொகை தொழிலாளர் நல வாரியத்திற்கு திருப்பி வீணாக அனுப்பி ைவக்கப்படுகிறது. இதன்படி கடந்த ஆண்டு மட்டும் ₹5 கோடி நல வாரியத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 2019-20ம் நிதி ஆண்டில் 370 நிறுவனங்களிடமிருந்து 5 கோடியே 3 லட்சத்து 2 ஆயிரத்து 817 ரூபாய் நல வாரியத்திற்கு திருப்பி செலுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான தகவலை தொழிலாளர் நலத்துறை கூடுதல் ஆணையரும், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய செயலாளருமான உமா தேவி வெளியிட்டுள்ளார்.

மாதம் வாரியாக தொகை

மாதம்    தொகை

ஏப்ரல் 19        59,31,210

மே 19        18,60,047

ஜூன் 19        58,98,333

ஜூலை 19    19,69,459

ஆக. 19        13,49,845

ெசப். 19        25,70,449

அக்.19        47,67,578

நவ. 19        24,73,913

டிச. 19        84,23,470

ஜன.20        58,80,627

பிப். 20        53,14,715

மார்ச் 20        38,63,163

ெமாத்தம்    5,03,02,817

Related Stories: