சுற்றுச்சூழல், நீர் ஆதாரங்களை கண்டறியும் செயற்கைக்கோள் கட்டுப்பாட்டு மையம் திறப்பு: இஸ்ரோ தலைவர் சிவன் தொடங்கி வைத்தார்

சென்னை:  ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள தனியார்  பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், சுற்றுச்சூழல் மற்றும் நீர் ஆதாரங்களை கண்டறிய உதவும் வகையில் செயற்கைக்கோள் தரைதள கட்டுப்பாட்டு மையத்தை இஸ்ரோ தலைவர் கே.சிவன் இணைய வழியாக தொடங்கி வைத்தார். இதுகுறித்து, கல்லூரியின் பேராசிரியர் பெனிஸ்ஸா கூறியதாவது: கல்லூரி மாணவர்களால் உருவாக்கப்பட்ட யூனிட்டி சாட் ஜேஐடி சாட் என பெயரிடப்பட்டுள்ள செயற்கைக்கோள் ராக்கெட் மூலம் ஹரிகோட்டாவில் இருந்து வரும் பிப்ரவரி 28ம் தேதி விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.  இதை தொடர்ந்து, புதிய செயற்கைக்கோள் ஒன்றை நாங்கள் உருவாக்கினோம். எங்கள் கல்லூரியில் உள்ள பல்வேறு துறை சார்ந்த 12 மாணவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்து, நானோ செயற்கைக்கோளை உருவாக்கினோம். எங்கள் செயற்கைக்கோள் 460 கிராம் மட்டுமே எடை கொண்டது.

முக்கியமான இணையதள அமைப்புகளை கட்டுப்படுத்துவதற்கு இந்த செயற்கைக்கோளை பயன்படுத்தலாம். உதாரணமாக, இணையம் சார்ந்த விஷயங்களையும், செயல்பாடுகளையும் கண்காணிக்க இந்த செயற்கைக்கோளை பயன்படுத்தலாம். இதற்காக தரைதள கட்டுப்பாட்டு மையம் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. டாக்டர் கல்பனா சால்வா நானோ செயற்கைக்கோள் ஆராய்ச்சி நிலையம் என்ற பெயரில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஆய்வகம் மூலம் செயற்கைக்கோள் தரவை கண்காணிக்கப்பட உள்ளது என்றார்.

Related Stories: