தலைநகர் டெல்லியில் மீண்டும் பதற்றம்: இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு; 4 கார்கள் சேதம்; ஒருவர் காயம்.!!!

டெல்லி: மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் கூட்டம் இன்று தொடங்கிய நிலையில் டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டுவெடித்துள்ளது. டெல்லி இந்தியா கேட் அருகே அமைந்துள்ள டாக்டர் அப்துல்கலாம் சாலையில் இஸ்ரேல் தூதரகம் அமைந்துள்ளது. இந்த இஸ்ரேல் தூதரகம் அருகே 50 மீட்டருக்குள் சிறிது நேரத்திற்கு முன் வெடிகுண்டு வெடித்துள்ளது. இதன்காரணமாக அப்பகுதியில் உள்ள 4 கார்கள் சேதமடைந்துள்ளது. ஒருவர் காயமடைந்துள்ளார்.

தகவலறிந்த டெல்லி காவல்துறை, அப்பகுதியில் உள்ள சாலைகளை மூடங்கியுள்ளனர். தொடர்ந்து, குண்டுவெடித்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். குண்டுவெடித்த இடத்திற்கு அருகே தீயணைப்பு வாகனமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், குண்டுவெடித்த இடத்திற்கு அருகே வேறு ஏதும் குண்டு பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து குண்டுசெயலிழப்பு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த செயலில் ஈடுபட்டது யார்? என்பது குறித்து டெல்லி போலீஸ் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளது.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டெல்லியில் ஒருபுறம் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் தொடங்கியது. இந்ந நிலையில், டெல்லியில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: