இதய கோளாறால் அவதி சவுரவ் கங்குலிக்கு மீண்டும் ஆஞ்சியோ

புதுடெல்லி: இதய கோளாறால் அவமதிப்படும் கங்குலிக்கு மருத்துவ பரிசோதனை முடிவுகளுக்கு பின்  மீண்டும் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டது.  இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரிய தலைவரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலிக்கு, கடந்த 2ம் தேதி நெஞ்சுவலி ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டு, கடந்த 7ம் தேதி வீடு திரும்பினார். இந்நிலையில், நேற்று முன்தினம்் அவருக்கு இதய கோளாறு பிரச்னை மீண்டும் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. பரிசோதனை முடிவுகள் வந்த பின்னர் அது குறித்து மருத்துவர்கள் குழு ஆலோசித்தனர்.  இதனை தொடர்ந்து நேற்று அவருக்கு மீண்டும் ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டது. ரத்த அடைப்புக்களை சரி செய்வதற்காக அவருக்கு 2 ஸ்டன்ட் பொருத்தப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.   மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் அசோக் பட்டாச்சாரியா உள்ளிட்டோர் கங்குலியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர்.

Related Stories: