கோயில்களில் நடைபெறும் திருப்பணிகளை கவனிக்க அறநிலையத்துறையில் தலைமை பொறியாளர் நியமனம்

சென்னை: கோயில்களில் நடைபெறும் திருப்பணிகளை கவனிக்க அறநிலையத்துறையில் தலைமை பொறியாளர் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 44,120 கோயில்கள் உள்ளன. கோயில்களில் நடைபெறும் பணிகளை கவனிக்க மாநிலம் முழுவதும் பல்வேறு நிலைகளில் பொறியாளர்கள் நியமிக்கப்பட்டனர். மேலும், இந்த பொறியாளர்கள் பிரிவுக்கு தலைமை வகிக்கும் வகையில் தலைமை பொறியாளர் பணியிடம் அறநிலையத்துறையில் உருவாக்கப்பட்டது. தொடர்ந்து இப்பணியிடத்துக்கு தகுதியான பொறியாளர்களை நியமிப்பது தொடர்பாக தமிழக அரசுக்கு அறநிலையத்துறை கடிதம் எழுதியிருந்தது.

இதையேற்று, பொதுப்பணித்துறையில் மருத்துவ கட்டுமான பிரிவு கண்காணிப்பு பொறியாளர் புவனேஸ்வரன் தலைமை பொறியாளராக பதவி உயர்வு வழங்கி, அவரை அறநிலையத்துறை தலைமை பொறியாளராக அயல்பணி அடிப்படையில் நியமனம் செய்து பொதுப்பணித்துறை அரசு செயலாளர் மணிவாசன் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: