ஜெயலலிதா வீட்டை பொதுமக்கள் பார்க்க தடை தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து அரசு முறையீடு: ஐகோர்ட்டில் இன்று விசாரணை

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவில்லமாக திறக்கலாம், ஆனால் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கக் கூடாது என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தலைமை நீதிபதி அமர்வில் முறையிட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா வசித்த போயஸ் தோட்ட இல்லம், நினைவு இல்லமாக திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதை எதிர்த்து தீபக் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். நீதிபதி சேஷசாயி முன் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தன.

வழக்கை விசாரித்த நீதிபதி, வேதா நிலையத்தை ஜெயலலிதா நினைவு இல்லமாக திறக்கலாம். ஆனால், வழக்கு முடியும்வரை அந்த இல்லத்தில் பொது மக்கள் பார்வையிட அனுமதிக்க கூடாது என்று உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜியிடம் நேற்று முன்தினம் நள்ளிரவில்  வீடியோ கான்பரன்ஸ் மூலம் முறையிடப்பட்டது. இதையடுத்து, நிகழ்ச்சி நடத்த தடையில்லை என்று கூறிய தலைமை நீதிபதி, மேல்முறையீடு வழக்கை நாளை (வெள்ளிக்கிழமை) விசாரிப்பதாக தெரிவித்துள்ளார். வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

Related Stories: