×

கிச்சன் டிப்ஸ்

நன்றி குங்குமம் தோழி

☻ எலுமிச்சை பழத்தில் இருந்து சாறு எடுத்ததும் தோலை நறுக்கி உப்பில் போட்டு வையுங்கள். காய்ந்த மிளகாய், பெருங்காயம், வெந்தயம் ஆகியவைகளை வறுத்து தூளாக்கி அத்துடன் சேருங்கள். உப்பும் சேர்த்தால் சிறந்த ஊறுகாய் ஆகிவிடும்.

☻ பூரிக்கு மாவை ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு கெட்டியாக பிசைந்து உடனே பொரித்து விடுங்கள். ஹோட்டல் பூரி ரெடி! ஓரிரு மணி நேரங்கள் ஊற விட்டீர்களானால் மாவு தளர்ந்து போகும்.

☻ உண்ணியப்பத்திற்கு மாவு பிசையும் போது அதில் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேருங்கள்.
- ஆர். ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.

☻ வெந்தயத்தை வேக வைத்து கடைந்து, தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.
- எஸ்.வேல் அரவிந்த், திண்டுக்கல்.

☻ மிளகாய் பொடி அரைக்கும் போது உலர்ந்த கறிவேப்பிலை, புதினா, கொத்த மல்லி இலைகளை சேர்த்து அரைத்தால் சாம்பார் வாசனையாகவும், சுவையாகவும் இருக்கும்.

☻ கேழ்வரகு மாவுடன் சிறிது வேர்க்கடலை சேர்த்து பக்கோடா செய்து பாருங்கள். ெமாறு மொறுவென்று சுவையாக இருக்கும்.                       - சு.கண்ணகி, வேலூர்.

☻ பஜ்ஜிமாவு, அடை மாவு போன்றவற்றில் புதினா இலைகளை அரைத்து சேர்த்து செய்தால் சுவையாக இருப்பதுடன் வாசனையாக இருக்கும். குழம்பு, ரசம் செய்யும் போது வறுத்துப் பொடித்த வெந்தயப்பொடி சிறிது சேர்த்து செய்தால் வாய்வு ஏற்படாது.                                                - எஸ். விஜயா சீனிவாசன், திருச்சி.

☻ தயிர் சாப்பிட்டால் குழந்தைகளுக்கு சளி பிடிக்கும் என்பது தவறு. குழந்தைகளுக்கு தயிர் மிகவும் நல்ல உணவு. அது குடலுக்கு மிக நல்லது. குழந்தைக்கு அலர்ஜி வராமல் தடுக்கும்.

☻ அஜீரணம், வயிற்றுப்புண், வாந்தி இவைகளை சீர்படுத்த தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் கால் டீஸ்பூன் சீரகத்தை தூள் செய்து கலந்து குடித்து வந்தால் வயிற்றுக் கோளாறுகள் மறைந்து விடும்.                                                               
- தஞ்சை ஹேமலதா, வெண்டையம்பட்டி.

☻  ரொட்டித் துண்டு காய்ந்து விட்டால், சிறிதளவு சூடான பாலை அதில் தெளித்து தோசைக் கல்லில் போட்டு வாட்டினால் ரொட்டித் துண்டு ‘பிரெஷ்’ ஆகிவிடும்.

☻ எந்த பட்சணம் ஆனாலும், தேங்காய்ப் பூவை அப்படியே போடுவதற்கு பதிலாக, மிக்ஸியில் ஒரு முறை சுற்றிப் போடலாம். வயதானவர்களுக்கும் சாப்பிட எளிதாக இருக்கும்.
- எஸ்.வளர்மதி, கொட்டாரம்.

☻ மட்டன் குழம்புடன் ஒரு செம்புக் காசையோ அல்லது தேங்காய் சிரட்டையின் துண்டை போட்டு வைத்தால் மட்டன் நன்கு வெந்து இருக்கும்.

☻ கொள்ளு ரசம் சர்க்கரை வியாதியைக் கட்டுப்படுத்தும்.  
- ஆர்.அம்மணி ரெங்கசாமி, வடுகப்பட்டி.

Tags :
× RELATED சோதனைகளும் சாதனைக்கே!