மத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், முக்கியமாக, எஸ்.பி.பிக்கு பத்ம விபூஷன், சாலமன் பாப்பையாவுக்கு பத்ம ஸ்ரீ; பாடகி சித்ரா பத்ம பூஷன் அறிவிக்கப்பட்டுள்ளது.
* பட்டிமன்ற நடுவரும் தமிழ் பேராசிரியருமான சாலமன் பாப்பையா* தமிழகத்தை சேர்ந்த வேளாண் துறையில் புகழ்பெற்ற பாப்பம்மாள் * தமிழகத்தைச் சேர்ந்த வில்லுப்பாட்டு கலைஞர் சுப்பு ஆறுமுகம்* கோவையைச் சேர்ந்த மறைந்த தொழிலதிபர் சுப்ரமணியன் * பிரபல பாடகி பாம்பே ஜெயஸ்ரீ * தமிழகத்தைச் சேர்ந்த கூடைப்பந்து விளையாட்டு வீராங்கனை அனிதா.* ஜோஹொ நிறுவன தலைமை செயலதிகாரி ஸ்ரீதர் வேம்பு உள்ளிட்ட 103 பேருக்கு மத்திய அரசு பதம்ஸ்ரீ விருது அறிவித்துள்ளது. பத்ம விபூஷன் விருது* மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியன். * கர்நாடகத்தைச் சேர்ந்த மருத்துவர் பெல்லே மோனப்பா.* அமெரிக்காவைச் சேர்ந்த நரிந்தர் சிங் கபானி* ஜப்பான் முன்னாள் பிரதமர் சின்சோ அபே.* ஒடிசாவை சேர்ந்த மணல் சிற்பக்கலைஞர் சுதர்ஷன்.* டெல்லியை சேர்ந்த மவுலானா வாஹிதுத்தீன் கான்.* பி.பி.லால் உள்ளிட்ட 7 பேருக்கு பத்ம விபூஷன் விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. பத்ம பூஷன் விருது* மக்களவை முன்னாள் சபாநாயகர் சுமித்ரா மகாஜன்* மறைந்த மத்தியமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான்* முன்னாள் அசாம் முதல்வர் தருண் கோகாய்* மதகுரு கல்பே சாதிக்.* பிரபல பின்னணி பாடகி சித்ரா* கேசுபாய் பட்டேல் உள்ளிட்ட 10 பேருக்கு பத்ம பூஷன் விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.