விருதுநகர் அருகே சேதமடைந்து கிடக்கும் ‘தாதம்பட்டி சாலை’: அதிகாரிகள் வேடிக்கை

விருதுநகர்: விருதுநகர் சூலக்கரையில் இருந்து தாதம்பட்டி கிராமத்திற்கு செல்லும் 2 கி.மீ ரோடு 10 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு ரூ.35 லட்சம் செலவில் போடப்பட்டது. மத்திய அரசின் கிராம சாலை திட்டம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் நிதிகளில் மாவட்டத்தில் போடப்பட்ட மற்றும் தற்போது போடப்பட்டு வரும் அனைத்து ரோடுகளும் தரமற்ற வகையில் போடப்படுவதற்கு இந்த ரோடு முன்மாதியாக திகழ்கிறது. கிராமப்புற சாலைகளை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள் கண்டும், காணாமல் இருப்பதால் ரோடுகள் போட வேண்டிய கனத்திற்கு ஜல்லிகற்கள் மற்றும் தார் பயன்படுத்துவதில்லை. அவசர கதியில் போடப்படும் கிராமப்புற சாலைகள் அனைத்தும் போட்ட 30 நாட்களில் குழிகள் விழுந்து விடுகின்றன.  

சூலக்கரை தாதம்பட்டி ரோடு போட்டு ஓராண்டிற்குள் பல இடங்களில் புதிய ரோடு ஜல்லி கற்கள் பெயர்ந்து குழிகள் விழுந்து ஏற்கனவே இருந்த ரோடுகள் தெரிகின்றன. ரோடுகளில் குழிகள் இருப்பதால் டூ வீலர், ஆட்டோ, பஸ், கனரக வாகனங்களில் செல்வோர் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் ரோடுகளுக்கு நிதி ஒதுக்குவதுடன் நிற்காமல் கண்காணிப்பு மற்றும் குழி விழுந்து ரோடுகளை முறையாக பலப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தாதம்பட்டி மக்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: